இது எனக்கு மிகவும் பிடித்த, வீட்டில் சுலபமாக செய்யக் கூடிய கருப்பட்டிக் கம்பு களிக்கு செய்முறையாகும். மிகவும் ஆரோக்கியமான சுவையான களி. எங்கள் கிராமப்புறங்களில் மிக பிரபலமான சங்கரதி சிறப்பு இனிப்பாகும்.
கம்பு மாவு செய்யும் முறை, முழு கம்பை நன்கு சுத்தம் செய்து, சூரிய ஒளியில் உலர்ந்த வேண்டும். பின்பு, உலர்ந்த கம்பை வறுத்து அரைக்க வேண்டும். இந்த கருப்பட்டி கம்பு களியை நெய் சேர்த்து சுவைக்க வேண்டும். ஆரோக்கியமான இந்த களியை விரும்பாதவர்கள் யவரும் இல்லை. கண்டிப்பாக அனைவரும் செய்து ருசிக்கவும்.
தேவையான பொருட்கள் :
1. கம்பு மாவு - 5 கிண்ணம்
2. கருப்பட்டி - 3
3. தண்ணீர் தேவையான அளவு
1. கம்பு மாவு - 5 கிண்ணம்
2. கருப்பட்டி - 3
3. தண்ணீர் தேவையான அளவு
செய்முறை விளக்கம் :
- முதல் படி, கருப்பட்டியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர், நறுக்கிய துண்டுகளை அடுப்பில் உள்ள பாத்திரத்தில் சேர்த்து 2 கிண்ணம் வரை தண்ணீர் சேர்த்து நன்கு கரைந்து , அதனை வடித்து எடுக்க வேண்டும்.
- தேவையான அளவு கம்பு மாவை மற்றொரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு கட்டிகள் இல்லாமல் கரைக்க வேண்டும்.
- கரைத்த கம்பு கலவையை, அடுப்பில் உள்ள கருப்பட்டி கரைசலில் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கட்டிகள் இல்லாமல் கலக்கவும்.
- மிதமான சூட்டில் வைத்து நன்கு கலவையை வேக வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து பரிசோதனை செய்து பார்க்கவும். கலவை பிசுபிசுப்பு தன்மை இல்லாமல் இருந்தால் களி தயாராக உள்ளது.
- இறுதியாக, சூடான களியை நன்கு கலக்கவும். ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் தடவி தேவையான அளவு களியை சேர்ந்து உருட்டிக் கொள்ள வேண்டும்.
- களியை நேய் சேர்ந்து அதை பரிமாறவும்.
படிப்படியான படங்கள் :
கருப்பட்டித் துண்டுகளை தண்ணீர்
சேர்த்து கரைக்கவும்.
சேர்த்து கரைக்கவும்.
கருப்பட்டியை வடிகட்டவும்.
கம்பு மாவை தேவையான அளவு
தண்ணீர் சேர்த்து கரைக்கவும்.
தண்ணீர் சேர்த்து கரைக்கவும்.
கருப்பட்டி மற்றும் கம்பு கலவையை
கலந்து அடுப்பில் வைக்கவும்.
கலந்து அடுப்பில் வைக்கவும்.
களி வேந்ததும் , படத்தில் உள்ள பதத்தில்
உள்ளதா என்று பார்க்கவும்.
உள்ளதா என்று பார்க்கவும்.
கிண்ணத்தில் சேர்த்து உருட்டிக் கொள்ளவும்.
களியை நெய் சேர்த்து பரிமாறவும்.
0 Comments