கோதுமை கேரட் கேக்



ஆரோக்கியமான சுவையான கோதுமை கேரட் வாதுமை கொட்டை(வால்நட்) கேக் , மிகவும் ஈரமான மற்றும் பஞ்சு போன்ற ஒரு அற்புதமான அமைப்புடன் இருக்கும். இந்த கேக்கில் உள்ள வாதுமை கொட்டை (வால்நட்) மிகவும் சுவையாக இருக்கும். 
இந்த கேக்கை மிகவும் எளிமையான முறையில் வீட்டிலேயே முயற்சி செய்து உங்கள் அன்புக்குரியவர்களை ஆச்சரியப்படுத்துங்கள். 

தேவையான பொருட்கள் :

1. கோதுமை மாவு - 1 1/4கப்
2. முட்டை - 2 
3. நாட்டு சர்௧்௧ரை - 3/4கப்
4. உ௫க்கிய வெண்ணெய் - 3/4கப்
5. து௫விய  கேரட் - 1 1/2கப்
6. பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
7. பேக்கிங் சோடா - 1/2 தேக்கரண்டி
8. வாதுமை கொட்டை நறுக்கிய ( வால்நட்) 
9. வெண்ணிலா சாறு - 1 தேக்கரண்டி
10. ஒரு சிட்டிகை உப்பு


செய்முறை விளக்கம் :

  • அடுப்பில் குக்கர் வைத்து 10-15நிமிடம் வரை சூடாக்கவும். ஒரு சதுர அல்லது வட்டம் வடிவம் பாத்திரத்தில் வெண்ணெய் காகிதம் கொண்டு கவர் செய்யவும். அல்லது வெண்ணெய் கொண்டு பாத்திரம் முழுவதும் தடவி, கோதுமை மாவு கொண்டு தூவல் செய்யவும். 

  • ஒரு பாத்திரத்தில்  நாட்டுச் சர்க்கரை, முட்டை, வெண்ணெய் மற்றும் வெண்ணிலா சாறு கலந்து நன்கு கலக்கி ஒதுக்கி வைக்கவும். 

  • நறுக்கிய கேரட்டுடன், கொட்டைகள் (nuts)   சிறிது கோதுமை மாவு சேர்த்து கலக்கி வைக்கவும். 

  • கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா ஆகியவற்றை ஒன்றாக சலிக்கவும். அதனுடன் கேரட் கலவை சேர்த்து நன்கு கலக்கவும்.

  • சர்க்கரை கலவையில் மாவு கலவையை சேர்த்து மெதுவாக கலக்கவும். 

  • இதை பேக்கிங் பான் சேர்ந்து அடுப்பை குறைந்த சுடரில் வைத்து 40 முதல் 45 நிமிடங்கள் சுட வேண்டும். பேக்கிங் நேரம் சற்று முன் பின் ஆகும். ஆகவே 30நிமிடம் பிறகு பல்குத்தி (toothpick) போன்ற பொருட்களை பயன்படுத்தி கேக் சோதனை செய்யவும்.
  • கேக் தயார் ஆனதும் அகற்றி முழுமையாக குளிர்வித்த பிறகு நறுக்கி பரிமாறவும்.


படிப்படியான படங்கள் :

அடுப்பில் குக்கர் வைத்து 10-15நிமிடம் வரை சூடாக்கவும். 
ஸ்டாண்ட் கொண்ட வெற்று குக்கர், அல்லது 
உப்பு அடுக்கு அதன் மேல் ஸ்டாண்ட் அல்லது மணல் அடுக்கு உபயோகிக்கலாம்.

சர்க்கரை கலவையில் மாவு கலவையை 
சேர்த்து மெதுவாக கலக்கவும். 


பேக்கிங் பான் சேர்ந்து ,30நிமிடம் பிறகு 
கேக் சோதனை செய்யவும். 


குளிர்வித்த பிறகு நறுக்கி பரிமாறவும்.


பஞ்சு போன்ற  கோதுமை கேரட் கேக் தயார்.

5 Comments

  1. வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. Super akka,, congrats
    Please add vlog.

    ReplyDelete
  3. I tried this recepie dear..it cake nice...thankyou for sharing the healthy recepies

    ReplyDelete