பாலக்கீரை முட்டை பொரியல் சாண்ட்விச்



  பாலக்கீரையில் அதிக இரும்பு சத்து உள்ளது. மற்றும் சுலபமாக ஜீரணமாகக் கூடிய கீரை வகை.

அதிக சத்துக்கள் நிறைந்த பாலக்கீரை மற்றும் முட்டை சேர்ந்து செய்ய கூடிய சாண்ட்விச். மிகவும் ஆரோக்கியமானது மற்றும் சுலபமாக வீட்டிலேயே செய்து சுவைக்கலாம்.இந்த பாலக்கீரை முட்டை பொரியலை சாண்ட்விச் ஆக இல்லாமல், சப்பாத்தி, ரொட்டி போன்றவைக் கூட சேர்ந்து சுவைக்கலாம்.

தேவையான பொருட்கள் :

1. பாலக்கீரை - 1 கப் (தேவையான அளவு)
2. முட்டை - 2
3. ரொட்டி (bread) - 4
4. உப்பு - தேவையான அளவு
5. மிளகு தூள் - 1 தேக்கரண்டி
6. வெண்ணெய் / நெய் - தேவையான அளவு


செய்முறை விளக்கம் :
  • பாலக்கீரையை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

  • ஒரு கிண்ணத்தில் முட்டை உடைத்து சேர்ந்து கலக்கி, அதனுடன் உப்பு மற்றும் மிளகு தூள் மற்றும் 2தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

  • அடுப்பில் ஒரு வாணலியை வைத்து 1/4தேக்கரண்டி கடலை எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்  சேர்த்து பாலக்கீரை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு வதக்க வேண்டும்.

  • கீரை நன்கு வதங்கியதும், வாணலியில் ஓரமாக வைத்துவிட்டு ஒரு தேக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து கலக்கிய முட்டை கலவையை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

  • முட்டை பொரியல் பாதி அளவு தயார் ஆனதும் கீரை மற்றும் முட்டை சேர்த்து ஒன்றாக வதக்க வேண்டும். முட்டை பொரியல் தயார் ஆனதும் அடுப்பில் இருந்து எடுத்து கிண்ணத்தில் வைக்கவும்.

  • சாண்ட்விச் தயார் செய்ய ரொட்டியை எடுத்து வெண்ணெய் அல்லது நெய் சிறிது தடவிய பிறகு தயார் செய்து வைத்த முட்டை பொரியல் கலவை சேர்த்து கொள்ள வேண்டும்.

  • சீஸ் துண்டு ( cheese slice) வைத்து மேல் ரொட்டி வைக்கவும்.

  • தோசை கல்லில் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து சாண்ட்விச் செய்ய ரொட்டியை வைத்து அதன் மேல் ஒரு சம  அடி அளவு கிண்ணத்தை வைத்து ரொட்டியை நன்கு அழுத்த வேண்டும். அப்போது தான் சாண்ட்விச்யை திருப்பி போடும் போது உள்ளே உள்ள முட்டை பொரியல் வெளியே வராமல் இருக்கும்.

  • இரண்டு புறமும் பொன்னிறமாக வந்ததும் அடுப்பில் இருந்து எடுத்து துண்டுகளாக நறுக்கி பரிமாறவும்.

படிப்படியான படங்கள்:



பாலக்கீரையை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.



முட்டை, உப்பு மற்றும் மிளகு தூள்  சேர்த்து நன்கு கலக்கவும்.


தண்ணீர் 2 தேக்கரண்டி சேர்த்து கலக்கவும். (முட்டை மென்மையாக இருக்கும்).


வாணலியில் எண்ணெய் சேர்த்து கொள்ளவும்.


கீரையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.


கீரை ஓரமாக வைத்துவிட்டு, எண்ணெய் ஊற்ற வேண்டும்.


முட்டை கலவை சேர்த்து நன்கு கலக்கவும்.


முட்டை பாதி தயார் ஆனதும் கீரையுடன் சேர்த்து வதக்க வேண்டும்.


முட்டை பொரியல் தயார் ஆனதும்
தனியாக எடுத்து வைக்கவும்.




ரொட்டியை எடுத்து வெண்ணெய் அல்லது
நெய் சேர்த்து கொள்ளவும்.



அதன் மேல் முட்டை பொரியல் சேர்த்து,
சீஸ் துண்டு ( cheese slice)  வைக்கவும்.





ரொட்டியை வைத்து தயார் செய்து கொள்ள வேண்டும்.




தோசை கல்லில் வெண்ணெய் அல்லது நெய் ,சேர்த்து கொள்ளவும். 
ரொட்டியை வைத்து, மேல் ஒரு கிண்ணத்தை வைத்து நன்கு கீழே அழுத்த வேண்டும்.


இரண்டு புறமும் பொன்னிறமாக வந்ததும்,அடுப்பில் இருந்து எடுக்க வேண்டும்.




துண்டுகளாக நறுக்கி பரிமாறவும்.

0 Comments