ராகி நூடுல்ஸ்


எல்லோருக்கும் நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் குழந்தைகளுக்கு மிக மிக பிடித்தமான ஒன்று. அதில் என்னுடைய மகனும் அப்படி தான், மிகவும் விரும்பி வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவான்.

நம் அனைவரும் வீட்டில் இருக்கும் இந்த நேரத்தில் ஆரோக்கியமான உணவுகளை வீட்டில் உள்ளவர்களுக்கும் நமக்கும் தேவை. சாதாரணமாக நம் வீட்டில் இருக்கும் இரண்டு பொருட்கள் வைத்து மிகவும் சுலபமாக இந்த நூடுல்ஸ் செய்துவிடலாம்.


ராகியில் அதிக அளவு கால்சியம் சத்துக்கள் உள்ளன, இது நம் எலும்புகளுக்கு மிகவும் நன்மை தரக் கூடியவை. நீங்கள் ராகி மற்றும் இல்லாமல் இதே முறையில் வித விதமான நூடுல்ஸ் சுலபமாக வீட்டில் செய்து விடலாம்.


என் கணவர் இரவு உணவிற்கு நூடுல்ஸ் வேண்டும் என்று கேட்டார். அவருக்கு மாகி நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று. அதை தவிர்க்கவே இதை தயார் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. எதிர்பார்க்காமல் என்னுடைய மகன் இந்த நூடுல்ஸ் சுவை பிடித்ததால் வேண்டும் என்று விரும்பி சாப்பிட்டான்.

இதேபோல் நீங்களும் தயார் செய்து பார்த்து கருத்துக்களை கூறுங்கள்.


தேவையான பொருட்கள் :

1. ராகி மாவு - 1/2 கப்
2. அரிசி மாவு - 1/2 கப்
3. எண்ணெய் - 1 தேக்கரண்டி
4. உப்பு தேவையான அளவு
5. கொதித்த தண்ணீர் - 1-11/4 கப்


1. எண்ணெய் - 1 தேக்கரண்டி
2. பூண்டு - 3-4 பல் (தட்டியது)
3. பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
4. பச்சை மிளகாய் - 2
5. கேரட் - 1/2 கப்
6. முட்டைகோஸ் - 1 கப்
7. வேக வைத்த மக்காச்சோளம் - 1/4 கப்
8. தக்காளி சாஸ் - 1 தேக்கரண்டி (தேவையான அளவு)
9. சோயா சாஸ் - 1 தேக்கரண்டி (தேவையான அளவு)
10. உப்பு தேவையான அளவு
11. மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி


செய்முறை விளக்கம் :

  • ‌அடுப்பில் வாணலியை வைத்து, மிதமான சூட்டில் ராகி மாவு சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும். அதேபோல் அரிசி மாவு சேர்த்து தனி தனியாக வறுத்து ஒன்றாக கிண்ணத்தில் சேர்த்து கொள்ள வேண்டும்.

  • ‌பிறகு, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து கரண்டி வைத்து கலந்து கொள்ள வேண்டும். அனைத்து மாவும் தண்ணீர் பட கலந்து கொண்டு 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கை வைத்து கலந்து கொள்ள வேண்டும்.

  • ‌முறுக்கு பிழியும் அச்சு எடுத்து அதில், நூடுல்ஸ் தயார் செய்ய அளவில் உள்ள அச்சை எடுத்து கொள்ள வேண்டும். முறுக்கு பிடி மற்றும் அச்சில் எண்ணெய் தடவி கொள்ள வேண்டும்.

  • ‌பிறகு தயார் செய்த ராகி மற்றும் அரிசி மாவு கலவையை சேர்த்து , இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதித்த பிறகு, இட்லி தட்டில் துணி சேர்த்து அதன் மேல் நூடுல்ஸ் பிழிந்து விட வேண்டும்.

  • ‌ஒரு சுற்று சுற்றி மூடி வைத்து வேக வைக்க வேண்டும். 2-3 நிமிடம் பிறகு சோதனை செய்து பார்க்கவும் நூடுல்ஸ் நிறம் டார்க்காக மாறி இருக்கும். இதேபோல் அடுத்த சுற்றையும் அதன்மேலே பிழிந்து விட்டு 2-3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

  • ‌நூடுல்ஸ் அனைத்தும் தயார் ஆன பிறகு, சாதாரண தண்ணீரில் நூடுல்ஸ் அனைத்தும் சேர்த்து நன்கு உதிர்ந்து எடுக்க வேண்டும். பிறகு தண்ணீர் வடிகட்டி தட்டில் எடுத்து கொள்ள வேண்டும்.

  • ‌ஒரு வாணலியை வைத்து சூடான பிறகு 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும். தட்டி வைத்த பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.

  • ‌சிறிது வதங்கிய பிறகு, நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 1-2 நிமிடம் வதக்க வேண்டும். கடித்து சாப்பிடும் பதத்தில் வதக்க வேண்டும்.

  • ‌கேரட் மற்றும் முட்டைகோஸ் சேர்த்து சிறிது வதக்கி மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும். 2 நிமிடம் வதக்கிய பிறகு வேக வைத்த மக்காச்சோளம் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

  • ‌பிறகு, தேவையான அளவு தக்காளி மற்றும் சோயா சாஸ் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

  • அனைத்தும் வதக்கிய பிறகு, தயார் செய்த நூடுல்ஸ் சேர்த்து நிதானமாக கலந்து கொள்ள வேண்டும்.

  • ‌1/2 தேக்கரண்டி மிளகு தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.‌ மிகவும் சுலபமாக வீட்டில் செய்த ராகி நூடுல்ஸ் தயார்.

படிப்படியான படங்கள் :


அடுப்பில் வாணலியை வைத்து, 
மிதமான சூட்டில் ராகி மாவு சேர்த்து வறுக்கவும்.


அரிசி மாவு சேர்த்து வறுக்கவும்.


 ஒன்றாக கிண்ணத்தில் 
சேர்த்து கொள்ளவும்.


‌ தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.



 கொதிக்க வைத்த தண்ணீர் சிறிது 
சிறிதாக சேர்த்து கரண்டி 
வைத்து கலந்து கொள்ளவும்.


அனைத்து மாவும் தண்ணீர் பட
 கலந்து கொண்டு 1 தேக்கரண்டி 
எண்ணெய் சேர்க்கவும்.


 கை வைத்து கலந்து கொள்ளவும்.


‌முறுக்கு பிழியும் அச்சு எடுத்து அதில், 
நூடுல்ஸ் தயார் செய்ய அளவில் 
உள்ள அச்சை எடுத்து கொள்ளவும்.


முறுக்கு பிடி மற்றும் அச்சில் 
எண்ணெய் தடவி கொள்ளவும்.





‌இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து 
கொதித்த பிறகு, இட்லி தட்டில் துணி
 சேர்த்து அதன் மேல் நூடுல்ஸ் பிழிந்து விடவும்.


‌ஒரு சுற்று சுற்றி மூடி வைத்து
 வேக வைக்கவும்.


2-3 நிமிடம் பிறகு சோதனை செய்து 
பார்க்கவும் நூடுல்ஸ் நிறம் 
டார்க்காக மாறிவிடும்.


அடுத்த சுற்றையும் அதன்மேலே பிழிந்து 
விட்டு 2-3 நிமிடம் வேக வைக்கவும்.


‌நூடுல்ஸ் அனைத்தும் தயார் ஆன பிறகு, 
சாதாரண தண்ணீரில் நூடுல்ஸ்
 சேர்த்து நன்கு உதிர்ந்து எடுக்கவும்.


தண்ணீர் வடிகட்டி தட்டில் 
எடுத்து கொள்ளவும்.


‌ஒரு வாணலியை வைத்து சூடான 
பிறகு 1 தேக்கரண்டி எண்ணெய் 
சேர்த்து சூடாக்கவும்.


தட்டி வைத்த பூண்டு சேர்த்து வதக்கவும்.


‌நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும்
 2 பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.



‌கேரட் மற்றும் முட்டைகோஸ் சேர்த்து
 சிறிது வதக்கி மற்றும் உப்பு சேர்த்து
 நன்கு வதக்கி விடவும்.


வேக வைத்த மக்காச்சோளம் 
சேர்த்து வதக்கவும்.

 


‌தேவையான அளவு தக்காளி மற்றும் 
சோயா சாஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.


‌அனைத்தும் வதக்கிய பிறகு, தயார் 
செய்த நூடுல்ஸ் சேர்த்து மெதுவாக 
கலந்து கொள்ளவும்.


‌1/2 தேக்கரண்டி மிளகு தூள் சேர்த்து 
கலந்து கொள்ளவும்.


சுவையான ராகி நூடுல்ஸ் தயார்.

குறிப்பு :
  • ராகி மாவு மற்றும் இல்லாமல் அமைத்து மாவிலும் இதே போல் தயார் செய்யலாம்.

2 Comments

  1. அருமையான சமையல் குறிப்பு அனைவருக்கும் பிடித்த நூடுல்ஸ் சத்தானதாகவும் இருக்கும்.

    ReplyDelete