எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான மற்றும் ஆரோக்கியமான, நாட்டுச்சர்க்கரை கொண்டு செய்த கோதுமை தேங்காய் பிஸ்கட். எனக்கு தெரிந்த வரை இந்த பிஸ்கட் இல்லாத டீ கடைகளே இல்லை.
அதை ஆரோக்கியமாக மாற்ற, கோதுமை மாவு மற்றும் இனிப்பு சுவைகாக நாட்டுச்சர்க்கரையைப் பயன்படுத்தி உள்ளேன். குழந்தைகளுக்கு பிஸ்கட் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று. இவ்வாறு, வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஆரோக்கியமான முறையில் செய்து கொடுப்பது நல்லது.
ஏனெனில், இதில் எந்த ஒரு தேவையற்ற பதனச்சரக்கும்(preservatives) சேர்க்கப்படவில்லை. மற்றும் பிஸ்கட்களின் வடிவம் மாறாமல் இருக்க வெளியே வாங்கும் பிஸ்கட் பாக்கெட்டுகளில்(packets) தேவையற்றப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.
இதில் தேங்காய் சேர்த்து உள்ளதால் மேலும் ஆரோக்கியமானது. தேங்காய் தூள்(desiccated coconut) இதை வீட்டிலேயே சுலபமாக செய்துவிடலாம். தேங்காயை உலர்ந்தி அல்லது தேங்காயின் வெள்ளை பகுதியை மட்டும் துண்டுகளாக்கி தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், அரைத்த தேங்காய் பொடியை வெரும் வாணலியில் சேர்த்து நன்கு வறுத்து எடுக்க வேண்டும்.
தேவையான பொருட்கள் :
1. கோதுமை மாவு - 1 கப்
2. நாட்டுச்சர்க்கரை - 1/2 கப்
3. தேங்காய் தூள் (desiccated coconut)- 1/2 கப்
4. உருக்கிய வெண்ணெய் - 1/2 கப்
5. பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி
6. தேங்காய் தூள்(desiccated coconut) - 1 மேசைக்கரண்டி
7. பால் - 2-3 மேசைக்கரண்டி ( தேவைக்கேற்ப)
1. கோதுமை மாவு - 1 கப்
2. நாட்டுச்சர்க்கரை - 1/2 கப்
3. தேங்காய் தூள் (desiccated coconut)- 1/2 கப்
4. உருக்கிய வெண்ணெய் - 1/2 கப்
5. பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி
6. தேங்காய் தூள்(desiccated coconut) - 1 மேசைக்கரண்டி
7. பால் - 2-3 மேசைக்கரண்டி ( தேவைக்கேற்ப)
- அடுப்பில் குக்கர் வைத்து 10-15நிமிடம் வரை சூடாக்கவும். ஒரு வட்டம் வடிவ வெண்ணெய் காகிதம் கொண்டு கவர் செய்யவும். அல்லது வெண்ணெய் கொண்டு பாத்திரம் முழுவதும் தடவி, கோதுமை மாவு கொண்டு தூவல் செய்யவும்.
- ஒரு பாத்திரத்தில் நாட்டுச் சர்க்கரை, மற்றும் வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி வைக்க வேண்டும்.
- கோதுமை மாவு, பேக்கிங் பவுடர் மற்றும் தேங்காய் தூள்(desiccated coconut) சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
- மாவு கலவையை சர்க்கரை கரைசலில் சேர்த்து நன்கு பிசைந்து எடுக்க வேண்டும்.
- மாவு கலவை உருண்டை பிடிக்கும் பதத்தில் வர சிறிது சிறிதாக பால் சேர்த்து பிசைய வேண்டும்.
- பின்பு, சிறிது சிறிது உருண்டைகளாக எடுத்து தட்டி அல்லது குக்கீ கட்டர்(cookie cutter) இருந்தால் தேவையான வடிவத்தில் செய்துகொள்ள வேண்டும்.
- அதன் மேல் தேங்காய் தூள்(desiccated coconut) சிறிது தூவி விட வேண்டும்.
- இதை பேக்கிங்( baking) தட்டில் சேர்ந்து அடுப்பை குறைந்த சுடரில் வைத்து 40 முதல் 45 நிமிடங்கள் சுட வேண்டும். பேக்கிங்(baking) நேரம் சற்று முன் பின் ஆகும். அடிக்கடி சோதனை செய்து கொள்ள வேண்டும்.
- பிஸ்கட் ஓரளவு பொன்னிறமாக வந்ததும் வெளியே எடுக்க வேண்டும்.
- வெளியே எடுத்ததும் பிஸ்கட் ஓரங்களில் நல்ல முறுமுறுப்புடன் மற்றும் நடுவில் மென்மையாக தோன்றும். அதை சிறிது நேரம் காற்றில் வெளியே வைத்தால் பிஸ்கட் முழுவதும் முறுமுறுப்பாக மாறிவிடும். இப்போது பிஸ்கட் சுவைக்க தயார்.
- பிஸ்கட்களை காற்று போகாதப் பெட்டியில் சேமித்து வைக்கவும்.
படிப்படியான படங்கள் :
அடுப்பில் குக்கர் வைத்து 10-15நிமிடம் வரை சூடாக்கவும்.
வெண்ணெய் மற்றும் நாட்டுச்சர்க்கரை சேர்ந்து கரைக்க வேண்டும்.
கோதுமை மாவுடன் பேக்கிங் பவுடர் மற்றும்
தேங்காய் தூள்(desiccated coconut) சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
மாவு மற்றும் நாட்டுச்சர்க்கரை கரைசலை
ஒன்று சேர்ந்து பிசைய வேண்டும்.
சரியான பதத்திற்கு வர சிறிது பால் சேர்க்க வேண்டும்.
கலவையை உருண்டையாக எடுக்கவும்.
தேவையான வடிவத்தில் செய்து எடுக்கவும்.
வெண்ணெய் தடவிய தட்டில் வைத்து மேலே
சிறிது தேங்காய் தூள்(desiccated coconut) சேர்க்கவும்.
பொன்னிறமாக வந்ததும் அடுப்பில் இருந்து
எடுத்து வைக்க வேண்டும்.
காற்றில் ஆறிய பிறகு பரிமாறவும்.
0 Comments