மென்மையான டார்க் சாக்லேட் ( soft Dark Chocolate)


   அனைவருக்கும் சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சுவைக்க கூடிய ஒன்று சாக்லேட். அதிலும் குழந்தைகளுக்கு மிக மிக பிடித்தமான இனிப்பு.

டார்க் சாக்லேட் (dark chocolate) மிகவும் ஆரோக்கியமானது. நீங்கள் எந்த அளவுக்கு வேண்டும் என்றாலும் சுவைக்கலாம். அதை ஆரோக்கியமாக வீட்டிலேயே செய்து தருவது மிகவும் நல்லது. ரொம்ப கஷ்டம் இல்லாமல் சுலபமாக வீட்டிலேயே செய்து விடலாம்.

  இந்த சாக்லேட் செய்ய மிக முக்கியமான பொருள் கொக்கோ தூள் ( cocoa powder), சரியான நல்ல தரமான தூளாக இருக்க வேண்டும். ஏனெனில், டார்க் சாக்லேட்டில்( dark chocolate) உங்கள் ஆரோக்கியத்துக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன.வரும் காலங்களில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் நல்ல தரமான டார்க் சாக்லேட் (dark chocolate) சுவைக்க  பின்வரும் செய்முறையை பார்க்கவும்.

தேவையான பொருட்கள் :

1. கொக்கோ தூள் ( cocoa powder) - 1/2 கப்
2. சர்க்கரை தூள் - 1/4 கப்
3. வெண்ணெய் (வீட்டில் செய்தது) - 1/4 கப்
4. வெண்ணிலா சாறு ( vannila extract) -  1/2 தேக்கரண்டி
5. பால் - 1/4 கப்
6. உடனடி காபி தூள் ( instant coffee powder) -1/4 தேக்கரண்டி


செய்முறை விளக்கம் :
  • இரட்டை கொதிகலன்(double boiler) செய்முறையை செய்ய வேண்டும்.அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

  • அதன் மேல் ஒரு கிண்ணம் அல்லது பாத்திரத்தை வைக்க வேண்டும். மேலே உள்ள கிண்ணத்தில் வெண்ணெய் சேர்க்க வேண்டும்.

  • கீழே உள்ள பாத்திரத்தில் தண்ணீர் குதித்த உடன், அடுப்பை மிதமான சூட்டில் வைக்க வேண்டும்.

  • வெண்ணெய் உருகிய பிறகு, சர்க்கரை தூள் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

  • பிறகு, அதில் கொக்கோ தூள் ( cocoa powder) மற்றும் உடனடி காபி தூள் ( instant coffee powder) சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

  • கை விடாமல் கலக்க வேண்டும். பின்னர், வெண்ணிலா சாறு ( vannila extract) மற்றும் பால் சேர்த்து கலக்க வேண்டும்.

  • ஒரு 5 நிமிடம் இடை விடாது கலக்க வேண்டும். பிறகு, அடுப்பை அணைத்து மேலே உள்ள சாக்லேட் கலவை பாத்திரத்தை தனியே எடுத்து 5 நிமிடம் வைக்க வேண்டும். நீண்ட நேரம் வெளியே இருந்தால் சாக்லேட் கலவை கெட்டியாக துவங்கி விடும்.

  • சாக்லேட் அச்சு அல்லது ஏதேனும் ஒரு பெட்டியில் வெண்ணெய் காகிதம் ( butter paper) வைத்து சாக்லேட் கலவையை ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் உள்ள உறைவிப்பான்(freezer) 9-12 மணி நேரம் வைக்க வேண்டும்.

  • சாக்லேட் நன்கு தயார் ஆனதும் வெளியே எடுத்து தேவையான வடிவில் செய்து பரிமாற வேண்டும்.

படிப்படியான படங்கள் :


இரட்டை கொதிகலன்(double boiler) செய்முறையை செய்ய வேண்டும்.


மேலே உள்ள பாத்திரத்தில் வெண்ணெய் சேர்க்கவும்.


வெண்ணெய் உருக்க வேண்டும்.


கீழே உள்ள தண்ணீர் கொதி நிலைக்கு வந்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும்.



உடனடி காபி தூள்(instant coffee powder) சேர்த்து கலக்கவும்.



கொக்கோ தூள்(cocoa powder) சேர்த்து கலக்கவும்.


வெண்ணிலா சாறு(vannila extract) மற்றும் பால் சேர்த்து கலக்கவும்.


5 நிமிடம் இடை விடாது கலக்கவும்.


நறுக்கிய பாதாம் பருப்பை சேர்ந்து கலக்கவும்.


சாக்லேட் கலவையை தனியே வைக்கவும்.


ஒரு பெட்டியில் வெண்ணெய் காகிதம் ( butter paper) வைத்து தயார் செய்யவும்.


சாக்லேட் கலவையை ஊற்ற வேண்டும்.


உறைவிப்பான்(freezer) 9-12 மணி நேரம் வைக்கவும்.


ஒரு பெட்டியில் வெண்ணெய் காகிதம் ( butter paper) இருந்து சாக்லேட் எடுத்து தேவையான வடிவில் செய்து கொள்ள வேண்டும்.


குளிர்சாதன பெட்டியில் வைத்து எடுத்து பரிமாறவும்.

2 Comments