கோதுமை மக்காச்சோளம் மற்றும் வெங்காயம் சீஸ் சமோசா :


எனக்கு சின்ன வயதில் இருந்தே சமோசா என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று. எப்போ எங்கே பார்த்தாலும் உடனே வாங்கி அனைத்தும் சாப்பிடுவேன். இப்போ கூட எனக்கு சாப்பிடலாம் போல் இருக்கு. அப்போ எல்லாம் அது மைதா மாவு மற்றும் என்ன எண்ணையில் செய்கிறார்கள் என்று எல்லாம் யோசித்தது இல்லை.

காலம் மாறி வருகிறது அனைவரும் ஆரோக்கியமான உணவு வகைகளை தேடி ஓடுகிறோம். அதனால் எனக்கு பிடித்தமான இந்த சமோசாவை ஆரோக்கியமான முறையில் இருக்க கோதுமை மாவில் தயார் செய்துள்ளேன்.


குழந்தைகளுக்கு மேலும் பிடித்தமானதாக மாற்ற இதில் சீஸ் சேர்த்துள்ளேன். மிகவும் சுலபமாக வீட்டில் ஆரோக்கியமான முறையில் உடனே செய்யக்கூடிய ஒரு தின்பண்டம். குழந்தைகள் இல்லாமல் அனைவருக்கும் கண்டிப்பாக மிகவும் பிடிக்கும், செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

தேவையான பொருட்கள் :

சமோசா தாள் :
1. கோதுமை மாவு - 1/2 கப்
2. உப்பு - 1/4 தேக்கரண்டி
3. கடலை எண்ணெய் - 2 தேக்கரண்டி (சூடான எண்ணெய்)



திணிப்பு :
1. பெரிய வெங்காயம் - 1 கப் (நீளவாக்கில் நறுக்கியது)
2. மக்காச்சோளம் - 1 கப் (வேக வைத்தது)
3. சீஸ் - 1/2 கப்
4. மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி (சுவைக்கேற்ப)
5. சீரகம் தூள் - 1/4 தேக்கரண்டி (சுவைக்கேற்ப)
6. உப்பு தேவையான அளவு



செய்முறை விளக்கம் :

சமோசா தாள் :

  • ‌ஒரு கிண்ணத்தில் 1/2 கப் கோதுமை மாவு சேர்த்து, அதில் உப்பு மற்றும் சூடான கடலை எண்ணெய் 2 தேக்கரண்டி சேர்க்க வேண்டும். கலந்து விட வேண்டும்.

  • ‌பிறகு, தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து, மாவை நன்கு உருட்டி எடுக்க வேண்டும்.

  • ‌மேலும் 1/2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்கு உருட்டி எடுக்க வேண்டும்.

  • ‌இதை மூடி வைத்து, 1/2 - 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

  • ‌பிறகு, கோதுமை மாவு தூவி சப்பாத்தி கட்டையை வைத்து நன்கு மெல்லிய அளவில் தேய்க்க வேண்டும்.

  • ‌கத்தி எடுத்து, நன்கு செவ்வகம் வடிவில் ஓரங்களை வெட்டி எடுக்க வேண்டும்.

  • ‌பிறகு, அதை இரண்டாக வெட்டி, தனி தனியாக எடுத்து வைக்க வேண்டும். அனைத்தும் இதேபோல் தேய்த்து, கத்தி கொண்டு வெட்டி தயார் செய்து கொள்ள வேண்டும்.

  • ‌பிறகு, தோசை கல்லை சூடாக்கி, இரண்டு தயார் செய்த சமோசா தாள் வைத்து, 10-20 வினாடி இரண்டு புறமும் சூட்டு எடுக்க வேண்டும். அனைத்தும் இதேபோல் செய்து எடுக்க வேண்டும். சமோசா தாள் தயார்.

திணிப்பு :

  • ‌ஒரு துணி அல்லது காகித தாள் கொண்டு, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, அதில் உள்ள ஈர தன்மையை எடுக்க வேண்டும்.

  • ‌ஒரு கிண்ணத்தில் வெங்காயம் மற்றும் வேக வைத்து உதிர்த்த இனிப்பு மக்காச்சோளம் சேர்க்க வேண்டும்.

  • ‌பிறகு, எடுத்து வைத்த மசாலா பொருட்கள் ஆன, மிளகாய் தூள் சீரகம் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். திணிப்பு தயார்.

  • ‌ஒரு சிறிய கிண்ணத்தில் 2 தேக்கரண்டி கோதுமை மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து பசை போன்று கலந்து கொள்ள வேண்டும்.

  • ‌தயார் செய்த சமோசா தாள் எடுத்து, ஒரு பக்கம் முக்கோணம் போன்று மடித்து, மீதமுள்ள பகுதியை தயார் செய்த கோதுமை பசைக் கொண்டு தடவ வேண்டும்.

  • ‌மறுபடியும், ஒரு முறை முக்கோணம் போன்று மடித்து, தேய்த்த பசையை நன்கு ஓட்டி அழுத்தி விட வேண்டும்.

  • ‌பிறகு, தயார் செய்த மக்காச்சோளம் மற்றும் வெங்காயம் திணிப்பு தேவையான அளவு எடுத்து உள்ளே வைக்க வேண்டும்.

  • ‌அதன் மேல் தேவையான அளவு சீஸ் வைத்து, சமோசா தாளை மூட வேண்டும். கோதுமை பசை கொண்டு நன்கு முக்கோணம் போன்று வைத்து ஒட்ட வேண்டும்.

  • ‌அனைத்தும் இதேபோல் தயார் செய்து வைக்க வேண்டும்.ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும். பிறகு மிதமான சூட்டில் வைத்து, தயார் செய்த சமோசா சேர்த்து, இரண்டு புறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

  • ‌இப்போது சுவையான மொறு மொறுப்பான கோதுமை மக்காச்சோளம் மற்றும் வெங்காயம் சீஸ் சமோசா தயார்.

படிப்படியான படங்கள் :
சமோசா தாள் :


ஒரு கிண்ணத்தில் 1/2 கப்
 கோதுமை மாவு சேர்க்கவும்.


 உப்பு மற்றும் சூடான கடலை எண்ணெய்
 2 தேக்கரண்டி சேர்க்கவும்.


கலந்து விடவும்.


‌தண்ணீர் சிறிது சிறிதாக சேர்க்கவும்.



‌1/2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து
 நன்கு உருட்டி எடுக்கவும்.


மூடி வைத்து, 1/2 - 1 மணி நேரம் 
ஊற வைக்கவும்.


‌கோதுமை மாவு தூவி சப்பாத்தி கட்டையை
 வைத்து மெல்லிய அளவில் தேய்க்கவும்.


‌கத்தி வைத்து செவ்வகம் வடிவில் 
ஓரங்களை வெட்டி எடுக்கவும்.


‌ இரண்டாக வெட்டி, தனியாக
 வைக்கவும்.


‌தோசை கல்லை சூடாக்கவும்.


இரண்டு தயார் செய்த சமோசா 
தாள் வைக்கவும்.


10-20 வினாடி இரண்டு புறமும்
 சூட்டு எடுக்கவும்.


சமோசா தாள் தயார்.

திணிப்பு :



காகித தாள் கொண்டு, நீளவாக்கில் நறுக்கிய 
வெங்காயம் சேர்த்து ஈர தன்மையை எடுக்கவும்.


‌ஒரு கிண்ணத்தில் வெங்காயம் சேர்க்கவும்.


வேக வைத்து உதிர்த்த இனிப்பு
 மக்காச்சோளம் சேர்க்கவும்.


‌மிளகாய் தூள் , சீரகம் தூள் மற்றும் 
உப்பு சேர்க்கவும்.


நன்கு கலந்து விட வேண்டும்.


‌ஒரு சிறிய கிண்ணத்தில் 2 தேக்கரண்டி 
கோதுமை மாவு சேர்க்கவும்.


தண்ணீர் சேர்த்து பசை போன்று 
கலந்து கொள்ளவும்.


‌தயார் செய்த சமோசா தாள் எடுத்து, ஒரு பக்கம்
 முக்கோணம் போன்று மடிக்கவும்.


மீதமுள்ள பகுதியை தயார் செய்த
 கோதுமை பசைக் கொண்டு தடவும்.


‌மறுபடியும், ஒரு முறை முக்கோணம் 
போன்று மடிக்கவும்.


‌மக்காச்சோளம் மற்றும் வெங்காயம் 
திணிப்பு எடுத்து உள்ளே வைக்கவும்.


‌மேல் சிறிது சீஸ் வைக்கவும்.


கோதுமை பசை கொண்டு
சமோசா தாளை மூடி, 
முக்கோணம் போன்று ஒட்டவும்.


‌அனைத்தும் இதேபோல் தயார்
 செய்து வைக்கவும்.


‌ஒரு வாணலியில் எண்ணெய் 
சேர்த்து சூடாக்கவும்.


மிதமான சூட்டில் வைத்து, தயார்
செய்த சமோசா சேர்க்கவும்.


இரண்டு புறமும் பொன்னிறமாக 
பொரித்து எடுக்கவும்.


‌சுவையான மொறு மொறுப்பான கோதுமை மக்காச்சோளம் மற்றும் வெங்காயம் சீஸ் சமோசா தயார்.


0 Comments