குறள் 945: "மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு".
விளக்கம்: மாறுபாடில்லாதா உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.
என் பெயர் பூவிழி, இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் கணினி அறிவியல் பொறியியலில் இளங்கலை முடித்துள்ளேன். சிறிது காலம் இனையதள வடிவமைப்பாளராக பணிப்புரிந்தேன். திருமணம் பிறகு அதிகப்படியான நேரத்தைச் சமையலறைக்குள் செலவிட வேண்டியிருந்தது. அப்போதிருந்து தான் சமையல் மேல் ஆர்வம் மற்றும் தேடல் அதிகமானது, மற்றும் எனக்கு வரைதல் மற்றும் கைவினைப்பொருட்கள், இசையைக் கேட்பது பொழுதுபோக்காகும்.
சமீபத்தில் எனக்கு அடுதல்(baking) மீது ஆர்வம் உண்டானது. மிகவும் சுலபமானதாகவும் புதிய முறையில் அடுதல்(baking) மற்றும் அதை அலங்காரத்துடன் தர விரும்புகிறேன்.
எனது அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள, நான் இந்த வலைப்பதிவைத் தொடங்குகிறேன். இந்த வலைப்பதிவின் நோக்கம் முக்கியமாக உணவைக் கொண்டாடுவதும், ஆரோக்கியமான உணவுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்வதும்.
எனது வலைப்பதிவு எளிதான முறையில் வீட்டிலேயே செய்யும்படி குறிப்புகளில் கவனம் செலுத்துகிறது. நுண்ணலை அடுப்பு(microwave oven) இல்லாமல் ஆரோக்கியமான முறையில் வீட்டில் இருக்கும் அடுப்பு மற்றும் பாத்திரத்தைக் கொண்டு அடுதல்(baking) முறையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதில் படிப்படியாக படங்கள் மற்றும் சமையல் வழிமுறைகளுடன் ஆரம்பநிலைக்கான அடுதல்(baking) செய்ய விரும்பும் இடுகையும்(post) நீங்கள் காண்பீர்கள்.
நம் அன்புக்குரியவர்கள் ஆசைப்படும் உணவுகளை, வீட்டிலேயே முழு அன்புக் கொண்டு செய்து தருவது மிகவும் மகிழ்ச்சியானது. இந்த வலைத்தளத்தில் இருக்கும் செய்முறையைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் கேள்வி இருந்தால், தயவுசெய்து அந்த செய்முறையின் பக்கத்தின் கருத்துப் பகுதியைப் பயன்படுத்தவும் அல்லதுamizhthampoo@gmail.comமின்னஞ்சல் அனுப்பலாம் உங்கள் கருத்துகள் மிகவும் வரவேற்கப்படுகின்றன.
இது என் மகனின் முதல் பிறந்த நாள் அன்று நான் அலங்கரித்த கைவினைப்பொருட்கள்.
எனது வலைப்பதிவைப் பார்வையிட்டதற்கு நன்றி... உங்களை மீண்டும் வரவேற்க புதுமையான சமையல் எப்போதும் இருக்கும்…
2 Comments
Superb poovili.. congrats..
ReplyDeleteThanks akka
Delete