ரவா மீன் வறுவல்


   இந்த மங்களூர் ஸ்டைல் ​​ரவா மீன் வறுவல் என்பது கடலோர இந்தியாவின் புகழ். இது ஒரு முறுமுறுப்பான வறுத்த மீன் செய்முறையாகும்.

மேலும் ஆரோக்கியமாக இருக்க தேங்காய் எண்ணெய் மற்றும் தோசைக் கல்லை உபயோகித்து உள்ளேன். ஒவ்வொரு முறையும் நான் மீன் வறுவலை மிகவும் வித்தியாசமாக உருவாக்குகிறேன். இது நான் சமீபத்தில் தயாரித்த ஒரு செய்முறையாகும், மிகவும் சுவையாக இருக்கும்.
மீன் வறுவல் என்பது கடலோர உணவு வகைகளின் பிரபலமான மற்றும் எளிதான செய்முறையாகும்.ரவாவுடன் பூசப்பட்ட விரைவான மற்றும் எளிமையான மீன் வறுக்கும் செய்முறையை இன்று பகிர்கிறேன். படிப்படியான புகைப்படங்கள் மற்றும் நடைமுறைகளுடன் கூடிய செய்முறை இங்கே.

தேவையான பொருட்கள் :

1. மீன் - 3
2. தேங்காய் எண்ணெய் - 2 -3 தேக்கரண்டி
3. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
4. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
5. கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி
6. உப்பு - 1 தேக்கரண்டி
7. புளி சாறு - 2-3 தேக்கரண்டி
8. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
9. ரவா - 5-6 மேசைக்கரண்டி ( தேவையான அளவு)


செய்முறை விளக்கம் :
  • மீன் மசாலா தயார் செய்ய, ஒரு கிண்ணத்தில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

  • அந்த கலவையில் தேவையான அளவு புளி சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்போது மீன் மசாலா தயார்.

  • ஒவ்வொரு மீன்களை எடுத்து அனைத்து பகுதிகளிலும் மசாலா கலவை தடவ வேண்டும். அனைத்து மீன்களுக்கும் மசாலா தடவிய பிறகு 10நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

  • பிறகு, தட்டில் ரவையை சேர்த்து அதன் மேல் மசாலா தடவிய மீன்களை வைத்து மீன் முழுவதும் ரவையை பூச்சு வேண்டும். இந்த மீன்களை 30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

  • பிறகு, தோசை கல்லை அடுப்பில் வைத்து 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும். சூடான பிறகு மிதமான சூட்டில் வைத்து, மசாலா மற்றும் ரவை தடவிய மீன்களை தோசை கல்லில் வைத்து வறுக்க வேண்டும்.

  • 5-7 நிமிடம் எல்லா பக்கமும் பொன்னிறமாக வறுக்க வேண்டும். இப்போது ரொம்ப சுவையான ரவா மீன் வறுவல் தயார்.

படிப்படியான படங்கள் :

ஒரு கிண்ணத்தில் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.


அதில் ,மிளகாய் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.


2 தேக்கரண்டி புளி சாறு சேர்க்க வேண்டும்.


மசாலா கலவையை நன்கு கலக்க வேண்டும்.


மீன் துண்டுகளை எடுத்து முழுவதும் தடவ வேண்டும்.


10நிமிடம் ஊற வைக்க வேண்டும்.


தட்டில் ரவையை சேர்க்கவும்.



ஊற வைத்த மீன்களை வரையில் சேர்த்து பூச்ச வேண்டும்.



பிறகு 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.



அடுப்பில் தோசை கல்லை வைத்து
தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.



சூடான பிறகு, மீன் சேர்த்து பொறிக்க வேண்டும்.



5-7 நிமிடம் ஒவ்வொரு பக்கமும் திருப்பி போட்டு
பொன்னிறமாக வறுக்க வேண்டும்.



ஒவ்வொரு பக்கமும் 1 நிமிடம் மூடி வைத்து பொறிக்க வேண்டும்.


மீன் வறுவல் தயார் எடுத்து காகிதத் தட்டில் வைக்க வேண்டும்.


பிறகு நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும்
 வெங்காயம் சேர்த்து பரிமாறவும்.

0 Comments