பூசணி பூ மற்றும் இலை பக்கோடா


பூசணி பூ, இலை மற்றும் காய் என அனைத்திலும் அதிக அளவில் சத்துக்கள் உள்ளன. அதன் சுவையும் பெரும்பாலும் குறிப்பிடப்படுகிறது, மேலும் இது இந்திய மாநில வங்காளத்தில் மிகவும் பிரபலமான உணவு.

இந்த பூசணி காயில் சத்துக்கள் நிறைந்து உள்ளதால் 7-8 மாத குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். அதேபோல் இதன் பூ மற்றும் இலையிலும் அதிக சத்துக்கள் உள்ளன. இதில் பக்கோடா மட்டும் இல்லாமல் பஜ்ஜி, பொரியல், சாண்ட்விச் மற்றும் கட்லெட் என அனைத்து விதத்திலும் செய்து சுவைக்கலாம்.
வெங்காயம் சேர்த்த பக்கோடா அனைவருக்கும் மிகவும் பிடித்தமான சிற்றுண்டிகளில் ஒன்று. அதில் மேலும் ஆரோக்கியமாக இருக்க நான் பூசணி பூ மற்றும் தளிர் இலையினை சேர்த்து பக்கோடா செய்துள்ளேன். மிகவும் சுவையானது மற்றும் வீட்டில் எளிதாக செய்ய கூடியதாகும்.




தேவையான பொருட்கள் :

1. பூசணி பூ - 4
2. பூசணி தளிர் இலை - 5
3. வெங்காயம் - 1 (பெரிய அளவு)
4. கடலை மாவு - 6 தேக்கரண்டி
5. அரிசி மாவு - 2 தேக்கரண்டி
6. மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
7. உப்பு தேவையான அளவு
8. சோம்பு - 1/4 தேக்கரண்டி
9. பச்சை மிளகாய் - அரை ( சிறிய துண்டுகளாக)
10. பூண்டு - 5 (தோலுடன் தட்டியது)
11. பெருங்காய தூள் - ஒரு சிட்டிகை
12. கருவேப்பிலை - 2
13. கொத்தமல்லி இலை


செய்முறை விளக்கம் :
  • பூசணி பூ மற்றும் தளிர் இலையினை தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும். பின், பூசணி பூவின் அடி பகுதியை நீக்கி எடுத்து வைக்க வேண்டும். தளிர் இலையினை துண்டுகளாக நறுக்கி நாரினை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும்.

  • வெங்காயத்தை நீளவாக்கில் சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

  • பாத்திரத்தில் பூசணி பூ மற்றும் நறுக்கிய இலை மற்றும் வெங்காயத்தை சேர்த்து கலக்க வேண்டும். பிறகு, சோம்பு, மிளகாய் தூள், உப்பு, கடலை மாவு மற்றும் அரிசி மாவு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

  • நன்கு பிசைந்து கலக்க வேண்டும் தண்ணீர் இல்லாமல். நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் தட்டி வைத்துள்ள பூண்டு சேர்த்து கலக்க வேண்டும். மற்றும்   கருவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்ந்து கலக்க வேண்டும்.

  • பக்கோடா பதத்தில் இருக்க வேண்டும், கெட்டியாக இருந்தால் தண்ணீர் தெளித்து பிசைந்து தயார் செய்ய வேண்டும்.

  • வாணலியில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடாக்கி, கலவையை சிறிய துண்டுகளாக சேர்த்து பொன்னிறமாக பொறித்து எடுக்க வேண்டும்.

  • இப்போது சுவையான பூசணி பூ, இலை மற்றும் வெங்காயம் பக்கோடா பரிமாற தயார்.

படிப்படியான படங்கள் :

பூசணி பூ மற்றும் தளிர் இலையினை தண்ணீரில் 
சுத்தம் செய்து வைக்கவும்.


பூசணி பூவில் உள்ள அடி பகுதியை நீக்க வேண்டும்.


பூசணி இலை தண்டில் உள்ள நாரினை சுத்தம் செய்யவும்.


பாத்திரத்தில், பூசணி பூ, இலை மற்றும் வெங்காயம் சேர்க்கவும்.


கலந்து கொள்ள வேண்டும்.


கடலை மாவு மற்றும் அரிசி மாவு சேர்த்து 
நன்கு பிசைந்து கலக்க வேண்டும்.


சோம்பு, மிளகாய் தூள், உப்பு மற்றும் பெருங்காயம் தூள் 
சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.


நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து கலக்க வேண்டும்.


நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் கருவேப்பிலை
 சேர்த்து கலக்க வேண்டும்.


பக்கோடா பதத்தில் தண்ணீர் தெளித்து தயார் செய்ய வேண்டும்.


வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும்.


சூடான எண்ணெய் 1 தேக்கரண்டி பக்கோடா மாவில் 
சேர்த்து கலக்க வேண்டும்.


மாவை சிறிய துண்டுகளாக எண்ணெயில் 
பொரித்து எடுக்க வேண்டும்.


பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.


சுவையான பக்கோடா தயார்.  

0 Comments