சிகப்பு அரிசி இட்லி மற்றும் தோசை


எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யக் கூடிய உணவு வகை இது. சாதாரண அரிசியை விட அதிக அளவு சத்துக்கள் இருப்பதால், அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள முயற்சி செய்து பார்க்கவும். இது மிகவும் எளிமையானதாக இருக்கும்.

இந்த சிகப்பு அரிசி இட்லி மற்றும் தோசை எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. ஏனெனில், இது சாதாரண இட்லியைப் போல மிகவும் நன்றாகவும் பஞ்சுபோன்றதாகவும் இருக்கும் மற்றும் மேலும் இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.


மேலும் இட்லி மென்மையாக இருக்கும் வகையில் நான் அவுல் சேர்த்துள்ளேன். நீங்கள் அவுல் சேர்க்காமலும் செய்யலாம். இந்த சிகப்பு அரிசி இட்லி மற்றும் தோசை செய்முறையை நிச்சயமாக முயற்சி செய்யுங்கள், நீங்கள் அதை நிச்சயமாக விரும்புவீர்கள்.


இந்த சிகப்பு அரிசியில் இட்லி மற்றும் தோசை இல்லாமல் சாப்பாடு, புட்டு என அனைத்தும் செய்து சுவைக்கலாம். மிகவும் சுவையாக இருக்கும் இந்த அரிசி. நீங்கள் சாப்பிட்டால் அதற்கு பிறகு அடிமையாக மாறிவிடுவீர்கள்.

தேவையான பொருட்கள் :

1. சிகப்பு அரிசி - 1 கப்
2. இட்லி அரிசி - 1 கப்
3. சிகப்பு அவுல் - 1/4 கப்
4. உளுந்து - 1/2 கப்
5. வெந்தயம் - 1 தேக்கரண்டி



செய்முறை விளக்கம் :

  • ‌உளுந்து மற்றும் வெந்தயம் தண்ணீர் சேர்த்து நன்கு சுத்தம் செய்து எடுக்க வேண்டும். அதேபோல், இட்லி அரிசி மற்றும் சிகப்பு அரிசி தனியாக எடுக்க வேண்டும்.

  • ‌பிறகு, வெந்தயம் மற்றும் உளுந்து ஒன்றாக தண்ணீர் சேர்த்து 6-8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதேபோல் இட்லி அரிசி மற்றும் சிகப்பு அரிசி சேர்த்து ஊற வைக்க வேண்டும். மற்றும் சிகப்பு அவுல் தனியாக ஊற வைக்க வேண்டும்.

  • ‌மாவு அரைக்கும் இயந்திரத்தில் உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து நன்கு மையாக, பஞ்சு போன்று சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து அரைத்து எடுக்க வேண்டும்.

  • ‌இட்லி மற்றும் சிகப்பு அரிசி மற்றும் அவுல் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சிறிது கொரகொரப்பாக அரைத்து எடுக்க வேண்டும்.

  • ‌அரைத்த கலவையில் உப்பு சேர்த்து தேவையான இட்லி பதத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

  • ‌இதை 6-8 மணி நேரம் நன்கு புளிக்க வைக்க வேண்டும்.

  • ‌இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து சூடாக்க வேண்டும். இட்லி தட்டில் ஈரமான துணியை வைத்து இட்லி மாவை தேவையான அளவு சேர்த்து 7-10 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.

  • ‌மிருதுவான பஞ்சு போன்ற சுவையான சிகப்பு அரிசி இட்லி தயார்.

  • ‌தேவையான அளவு மாவை எடுத்து தோசை மாவு பதத்தில் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.தோசை கல்லை சூடாக்கி, தோசை ஊற்றி எடுத்து பரிமாறவும்.


படிப்படியான படங்கள் :

உளுந்து மற்றும் வெந்தயம் 
எடுக்கவும்.


தண்ணீர் சேர்த்து 6-8 மணி நேரம்
 ஊற வைக்கவும்.


இட்லி மற்றும் சிகப்பு அரிசியை தனியாக
 6-8 மணி நேரம் ஊற வைக்கவும்.


சிகப்பு அவுல் தனியாக 
ஊற வைக்கவும்.


‌மாவு அரைக்கும் இயந்திரத்தில் உளுந்து 
மற்றும் வெந்தயம் சேர்க்கவும்.


நன்கு மையாக, பஞ்சு போன்று சிறிது 
சிறிதாக தண்ணீர் தெளித்து 
அரைத்து எடுக்கவும்.



‌அரிசி மற்றும் அவுல் சேர்க்கவும்.


தண்ணீர் சேர்த்து சிறிது 
கொரகொரப்பாக 
அரைத்து எடுக்கவும்.


‌உளுந்து மற்றும் அரிசி கலவையை சேர்க்கவும்.


உப்பு சேர்த்து தேவையான இட்லி 
பதத்தில் கலந்து கொள்ளவும்.


6-8 மணி நேரம் மாவை புளிக்க 
வைக்க வேண்டும்.


இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து
சூடாக்கி, தட்டில் ஈர துணியை வைத்து
 தேவையான அளவு மாவு ஊற்ற வேண்டும்.


7-10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.


மிருதுவான சிகப்பு அரிசி இட்லி தயார்.


 தோசை மாவு பதத்தில் கலந்து 
கொள்ள வேண்டும்.


தோசை மாவு ஊற்றி, நல்லெண்ணெய் 
சேர்க்கவும்.


சுவையான மொறு மொறுப்பான 
சிகப்பு அரிசி தோசை தயார்.

0 Comments