இந்த ஆரோக்கியமான சிற்றுண்டி சமையல் குறிப்பு உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அனைவருக்கும் வடை என்றால் மிகவும் பிடிக்கும். அதை ஆரோக்கியமாகவும் சுத்தமான முறையில் வீட்டில் செய்து சாப்பிட்டால் கண்டிப்பாக மகிழ்ச்சியாக இருக்கும்.
அதிலும் நன்கு மொறு மொறுப்பான வடை என்றால் சொல்லவே வேண்டாம், அனைவருக்கும் பிடிக்கும். அந்த வடையில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய வாழைப் பூ மற்றும் மிகவும் சத்துக்கள் கொண்ட பொன்னாங்கண்ணி கீரையை பயன்படுத்தி உள்ளேன். மிக சுலபமாக செய்யக் கூடிய குறிப்பு இது.
தேவையான பொருட்கள் :
1. வாழைப் பூ - 1 கப் (நறுக்கியது)
2. பொன்னாங்கண்ணி கீரை - 1 கப் (நறுக்கியது)
3. கடலை பருப்பு - 1/4 கப்
4. துவரம் பருப்பு - 2 மேஜைக்கரண்டி
5. வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது)
6. கொத்தமல்லி இலை - சிறிது நறுக்கியது
7. கருவேப்பிலை - 1 கொத்து (நறுக்கியது)
8. சீரகம் - 1/2 தேக்கரண்டி
9. சோம்பு - 1/2 தேக்கரண்டி
10. வர மிளகாய் - 2
11. உப்பு தேவையான அளவு
1. வாழைப் பூ - 1 கப் (நறுக்கியது)
2. பொன்னாங்கண்ணி கீரை - 1 கப் (நறுக்கியது)
3. கடலை பருப்பு - 1/4 கப்
4. துவரம் பருப்பு - 2 மேஜைக்கரண்டி
5. வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது)
6. கொத்தமல்லி இலை - சிறிது நறுக்கியது
7. கருவேப்பிலை - 1 கொத்து (நறுக்கியது)
8. சீரகம் - 1/2 தேக்கரண்டி
9. சோம்பு - 1/2 தேக்கரண்டி
10. வர மிளகாய் - 2
11. உப்பு தேவையான அளவு
செய்முறை விளக்கம் :
- முதலில் கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்பு எடுத்து தனி தனியாக 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- மிக்ஸியில் ஊறிய கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்பு தண்ணீர் வடித்து சேர்த்து கொள்ள வேண்டும்.
- அதில், சீரகம், சோம்பு மற்றும் வர மிளகாய் சேர்த்து கொண்டு, தண்ணீர் சேர்க்காமல் சிறிது கொர கொரப்பாக அரைத்து எடுக்க வேண்டும்.
- அதை ஒரு கிண்ணத்தில் மாற்றி, நறுக்கிய வாழைப் பூ (தண்ணீர், மோர் சிறிது மற்றும் மஞ்சள் தூள் கலவையில் வைக்க வேண்டும். கறுத்து போகாமல் இருக்க) , நறுக்கிய பொன்னாங்கண்ணி கீரை சேர்க்க வேண்டும்.
- பிறகு, நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை , கொத்தமல்லி இலை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். தண்ணீர் சேர்க்க தேவை இல்லை.
- சிறிய பந்து அளவில் வடை மாவை எடுத்து உருட்டி தட்டில் வைத்து அனைத்தும் தயார் செய்ய வேண்டும்.
- அடுப்பில் வாணலியை வைத்து பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும்.
- சூடான பிறகு, மிதமான சூட்டில் வைத்து உருட்டிய கலவை ஒவ்வொன்றாக எடுத்து தட்டி எண்ணெயில் சேர்க்க வேண்டும்.
- திருப்பி போட்டு இரண்டு புறமும் பொன்னிறமாக நன்கு மொறு மொறுப்பாக வரும் வரை பொரித்து எடுக்க வேண்டும்.
- சுவையான மொறு மொறுப்பான வடை தயார்.
படிப்படியான படங்கள் :
மிக்ஸியில் ஊறிய கடலை பருப்பு மற்றும்
துவரம் பருப்பு தண்ணீர் வடித்து சேர்த்து,
அதில் சீரகம், சோம்பு மற்றும்
வர மிளகாய் சேர்க்கவும்.
துவரம் பருப்பு தண்ணீர் வடித்து சேர்த்து,
அதில் சீரகம், சோம்பு மற்றும்
வர மிளகாய் சேர்க்கவும்.
நறுக்கிய வாழைப் பூ மற்றும் நறுக்கிய
பொன்னாங்கண்ணி கீரை, வெங்காயம்,
கருவேப்பிலை , கொத்தமல்லி இலை
மற்றும் உப்பு சேர்க்கவும்.
பொன்னாங்கண்ணி கீரை, வெங்காயம்,
கருவேப்பிலை , கொத்தமல்லி இலை
மற்றும் உப்பு சேர்க்கவும்.
சுவையான வடை தயார்.
0 Comments