ராகி தானியத்தில் அதிக அளவு கால்சியம் சத்துக்கள் உள்ளது. இதை 6 மாத குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். நீங்களும் அன்றாட உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ளுங்கள்.
வெகு நாட்களாக ராகியில் கேக் செய்ய வேண்டும் என்று இருந்தேன். ஒவ்வொரு உணவு வகையிலும் இதே போன்று வித்தியாசமாக சமையல் செய்ய மிகவும் ஆர்வம் உண்டு. அந்த ஆர்வத்தின் ஒரு அருமையான ஆரோக்கியமான உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இதில் ராகி மட்டும் இல்லாமல் கோதுமை மாவு மற்றும் நேந்திரம் பழம் பயன்படுத்தி உள்ளேன். வெண்ணெய் மற்றும் நெய் போன்ற பொருட்கள் இல்லாமல் மேலும் ஆரோக்கியமாக இருக்க செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி உள்ளேன்.
கண்டிப்பாக நீங்களும் இதே போன்று தயார் செய்து பார்த்து, உங்களின் கருத்துக்களை கூறுங்கள்.
தேவையான பொருட்கள் :
1. ராகி மாவு - 1 கப்
2. கோதுமை மாவு - 1/2 கப்
3. நாட்டு சர்க்கரை - 1/2 கப்
4. தேங்காய் எண்ணெய் - 1/2 கப்
5. தயிர் - 1/2 கப்
6. நேந்திரம் பழம் - 2
7. கொக்கோ பவுடர் - 2 மேஜைக்கரண்டி
8. பேக்கிங் பவுடர் - 1 1/2 தேக்கரண்டி
9. பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி
10. வெண்ணிலா சாறு - 1 தேக்கரண்டி
11. உப்பு தேவையான அளவு
12. பால் - 5-6 மேஜைக்கரண்டி
13. உலர் திராட்சை - தேவையான அளவு நறுக்கியது
14. வால்நட் - தேவையான அளவு நறுக்கியது
1. ராகி மாவு - 1 கப்
2. கோதுமை மாவு - 1/2 கப்
3. நாட்டு சர்க்கரை - 1/2 கப்
4. தேங்காய் எண்ணெய் - 1/2 கப்
5. தயிர் - 1/2 கப்
6. நேந்திரம் பழம் - 2
7. கொக்கோ பவுடர் - 2 மேஜைக்கரண்டி
8. பேக்கிங் பவுடர் - 1 1/2 தேக்கரண்டி
9. பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி
10. வெண்ணிலா சாறு - 1 தேக்கரண்டி
11. உப்பு தேவையான அளவு
12. பால் - 5-6 மேஜைக்கரண்டி
13. உலர் திராட்சை - தேவையான அளவு நறுக்கியது
14. வால்நட் - தேவையான அளவு நறுக்கியது
செய்முறை விளக்கம் :
- அடுப்பில் குக்கர் வைத்து 10-15நிமிடம் வரை சூடாக்கவும். ஒரு சதுர அல்லது வட்டம் வடிவம் பாத்திரத்தில் வெண்ணெய் காகிதம் கொண்டு கவர் செய்யவும். அல்லது வெண்ணெய் கொண்டு பாத்திரம் முழுவதும் தடவி, கோதுமை மாவு கொண்டு தூவல் செய்யவும்.
- ஒரு கிண்ணத்தில் நேந்திரம் பழம் சேர்த்து நன்கு மசித்து கொள்ள வேண்டும்.பழத்தின் விதைகள் மசியவில்லை என்றால் அதை மட்டும் அகற்றவும்.
- அதில் நாட்டுச் சர்க்கரை, தேங்காய் எண்ணெய் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.
- பிறகு, 1 தேக்கரண்டி வெண்ணிலா சாறு (vannila essence) சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
- கோதுமை மாவு, கொக்கோ பவுடர்,உப்பு, பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா ஆகியவற்றை ஒன்றாக சலிக்கவும்.
- பழத்தின் கலவையில் மாவு கலவை பாதி சேர்த்து மெதுவாக கலக்கவும். பிறகு, மீதமுள்ள கோதுமை மாவு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். கெட்டியாக இருப்பதால் சிறிது சிறிதாக பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
- சிறிய துண்டுகளாக நறுக்கிய உலர் திராட்சை மற்றும் வால்நட் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
- இதை பேக்கிங் பான் சேர்ந்து அடுப்பை குறைந்த சுடரில் வைத்து 30 முதல் 40 நிமிடங்கள் சுட வேண்டும். பேக்கிங் நேரம் சற்று முன் பின் ஆகும். ஆகவே 20நிமிடம் பிறகு பல்குத்தி ( டூத்பிக்) போன்ற பொருட்களை பயன்படுத்தி கேக் சோதனை செய்யவும்.கேக் தயார் ஆனதும் அகற்றி , தட்டில் ஆற வைக்க வேண்டும்.
- சிறிய துண்டுகளாக நறுக்கிய டார்க் சாக்லேட் ஒரு கிண்ணத்தில் சேர்த்து மற்றும் 4 மேஜைக்கரண்டி கிரீம் (fresh cream) சேர்த்து இரண்டு அடுக்கு கொதிநிலை மூலம் கரைத்து எடுக்க வேண்டும்.
- இந்த சாக்லேட் கலவையை கேக் மேல் பகுதியில் சேர்த்து கொள்ள வேண்டும்.நன்றாக கேக் ஆறிய பிறகு தேவையான வடிவில் நறுக்கி பரிமாறவும்.
- இப்போது சுவையான மிகவும் ஆரோக்கியமான ராகி நேந்திரம் பழம் சாக்லேட் கேக் தயார்.
படிப்படியான படங்கள் :
ஒரு கிண்ணத்தில் மசித்த
நேந்திரம் பழம், நாட்டுச் சர்க்கரை,
நேந்திரம் பழம், நாட்டுச் சர்க்கரை,
தேங்காய் எண்ணெய் ,
வெண்ணிலா சாறு மற்றும்
தயிர் சேர்க்கவும்.
தயிர் சேர்க்கவும்.
நன்கு கலந்து விடவும்.
கோதுமை மாவு, கொக்கோ பவுடர்,
உப்பு, பேக்கிங் பவுடர் மற்றும்
பேக்கிங் சோடா ஆகியவற்றை
ஒன்றாக சலிக்கவும்.
பழத்தின் கலவையில் மாவு கலவை
பாதியாக சேர்த்து மெதுவாக கலக்கவும்.
கெட்டியாக இருப்பதால் 4-5 மேஜைக்கரண்டி
பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.
உலர் திராட்சை மற்றும் வால்நட்
சேர்த்து கலந்து கொள்ளவும்.
இதை பேக்கிங் பான் சேர்ந்து அடுப்பை
குறைந்த சுடரில் வைத்து 30
முதல் 40 நிமிடங்கள் சுடவும்.
கேக் தயார் ஆனதும் அகற்றி ,
தட்டில் ஆற வைக்க வேண்டும்.
டார்க் சாக்லேட் ஒரு கிண்ணத்தில் சேர்த்து மற்றும் 4 மேஜைக்கரண்டி கிரீம்
சேர்த்து இரண்டு அடுக்கு கொதிநிலை
மூலம் கரைத்து எடுத்து,
கேக் மேல் பகுதியில் சேர்த்து கொள்ளவும்.
அதன்மேல் அலங்காரத்திற்கு வெள்ளி
சர்க்கரை பந்துகளை சேர்த்து உள்ளேன்.
கேக் ஆறிய பிறகு தேவையான
வடிவில் நறுக்கி பரிமாறவும்.
ஆரோக்கியமான ராகி நேந்திரம்
பழம் சாக்லேட் கேக் தயார்.
0 Comments