டல்கோனா, சாக்லேட் மற்றும் பிஸ்கட் அடுக்கு கேக்



இந்த குறிப்பு மிகவும் சுலபமாக அடுப்பு பயன்படுத்தாமல் ஒரு சுவையான கேக் செய்முறை பற்றி பார்க்கலாம்.


இப்போ சமீபத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் டல்கோனா காபி அதை வைத்து செய்யலாம். இதற்கு முன்னர் பதிவில் நான் எப்படி டல்கோனா காபி வீட்டில் இருக்கும் பொருட்கள் வைத்து என்று இணைத்துள்ளேன்.


இந்த கேக் 3 அடுக்குகளை கொண்டது, டல்கோனா, சாக்லேட் மற்றும் பிஸ்கட் என இருக்கும். இதில் டல்கோனா மற்றும் சாக்லேட் கலவையுடன் கிரீம் கலந்து சேர்த்துள்ளேன்.


இதேபோல் உங்கள் வீட்டில் நீங்களும் தயார் செய்து பார்த்து, உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.


தேவையான பொருட்கள் :

1. டல்கோனா கலவை - தேவையான அளவு
2. பிஸ்கட் - 15
3. வெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி (உருக்கியது)
4. டார்க் சாக்லேட் - 1/4 கப் (தேவையான அளவு)
5. கிரீம் (fresh cream) - 1/4 கப்
6. கிரீம் பவுடர் (whipping cream powder) - 50 கிராம்
7. இனிப்பான சுன்டவைக்கப்பட்ட பால் (sweetened condensed milk) - 1-2 மேஜைக்கரண்டி



செய்முறை விளக்கம் :

  • ‌மிக்ஸியில் தேவையான அளவு பிஸ்கட் (எந்த பிஸ்கட் பயன்படுத்தலாம்) எடுத்து சிறிய துண்டுகளாக உடைத்து சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.

  • ‌அதை ஒரு கிண்ணத்தில் மாற்றி 2 மேஜைக்கரண்டி உருக்கிய வெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

  • ‌கேக் தயார் செய்ய ஏதாவது ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் தடவி, அதில் கலந்த பிஸ்கட் சேர்த்து சமமாக பரப்பி அழுத்தி விட வேண்டும்.

  • ‌முதல் அடுக்கு தயார் இதை குளிர்சாதன பெட்டியில், அடுத்த அடுக்கு தயார் செய்யும் வரை வைக்க வேண்டும்.

  • ‌ஒரு கிண்ணத்தில் ஐஸ் கட்டிகளை சேர்த்து அதன் மேல் ஒரு கிண்ணம் வைத்து, அதில் கிரீம் பவுடர் மற்றும் கிரீம் (fresh cream) சேர்த்து நன்கு 10-15, நிமிடம் கலந்து கொள்ள வேண்டும்.

  • ‌பிறகு, ஒரு கிண்ணத்தில் நன்கு கொதிக்கும் தண்ணீர் ஊற்றி அதில் சாக்லேட் (எந்த விதமான சாக்லேட் பயன்படுத்தலாம்) கிண்ணம் வைத்து, 1 மேஜைக்கரண்டி பால் சேர்த்து கலந்து நன்கு சாக்லேட் கரைத்து எடுக்க வேண்டும்.

  • ‌இப்போது தயார் செய்த டல்கோனா காபி கலவையை எடுத்து, அதில் தயார் செய்த கிரீம் கலவை 1/4 கப் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு, 1மேஜைக்கரண்டி இனிப்பான சுன்டவைக்கப்பட்ட பால் (sweetened condensed milk) சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

  • ‌அடுத்து கரைத்த சாக்லேட் கலவையை மீதமுள்ள கிரீம் கலவையில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்போது இரண்டு அடுக்குகான கலவை தயார்.

  • ‌குளிர்சாதன பெட்டியில் வைத்த பிஸ்கட் கிண்ணத்தை எடுத்து வந்து, அதில் அடுத்த அடுக்காக சாக்லேட் கலவையை சேர்த்து கிண்ணம் முழுவதும் நன்கு பரப்பி விட வேண்டும். இரண்டாவது அடுக்கு தயார்.

  • ‌பிறகு, தயார் செய்த டல்கோனா காபி கலவையை சேர்த்து அதேபோல் சமமாக பரப்பி விட வேண்டும். மூன்றாவது அடுக்கு தயார்.

  • ‌அலங்காரத்திற்கு சாக்லேட் துண்டுகள் மற்றும் சிறிது துருவி சேர்த்துள்ளேன்.

  • ‌இதை 6-8 மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து தயார் ஆனதும் எடுத்து நறுக்கி பரிமாறவும்.




0 Comments