இதில் நான் பீட்ரூடுடன் உடன் பாதாம் பருப்பு மற்றும் ஓட்ஸ் பயன்படுத்தி உள்ளேன். உங்களிடம் இல்லை என்றால் வேறு முந்திரி அல்லது வால்நட் அல்லது பிஸ்தா போன்றவை கூட பயன்படுத்தலாம்.
இதில் எந்த விதமான தேவையற்ற பொருட்கள் சேர்க்கப்படவில்லை. இதற்கு முன்னர் நான் அடுப்பை பயன்படுத்தாமல் ஒரு பிரவுனி சமையல் குறிப்பு இணைத்துள்ளேன்.
தேவையான பொருட்கள் :
1. பீட்ரூட் - 2 (வேக வைத்தது)
2. பேரீச்சை பழம் - 12-15 (சிறிய துண்டுகளாக நறுக்கியது)
3. பாதாம் பருப்பு - 1/2 கப்
4. ஓட்ஸ் - 1/2 கப்
5. கொக்கோ பவுடர் - 3 மேஜைக்கரண்டி
6. தேன் - 5 மேஜைக்கரண்டி
7. தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
8. டார்க் சாக்லேட் - 1/4 கப்
1. பீட்ரூட் - 2 (வேக வைத்தது)
2. பேரீச்சை பழம் - 12-15 (சிறிய துண்டுகளாக நறுக்கியது)
3. பாதாம் பருப்பு - 1/2 கப்
4. ஓட்ஸ் - 1/2 கப்
5. கொக்கோ பவுடர் - 3 மேஜைக்கரண்டி
6. தேன் - 5 மேஜைக்கரண்டி
7. தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
8. டார்க் சாக்லேட் - 1/4 கப்
செய்முறை விளக்கம் :
- அடுப்பில் குக்கர் வைத்து 10-15நிமிடம் வரை சூடாக்கவும். ஒரு சதுர அல்லது வட்டம் வடிவம் பாத்திரத்தில் வெண்ணெய் காகிதம் கொண்டு கவர் செய்யவும். அல்லது வெண்ணெய் கொண்டு பாத்திரம் முழுவதும் தடவி கொள்ள வேண்டும்.
- பாதாம் பருப்பை சிறிது வறுத்து மிக்ஸியில் சேர்த்து பவுடர் செய்து ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.
- பிறகு, மிக்ஸியில் வேக வைத்த பீட்ரூட் சேர்த்து நன்கு மையாக அரைத்து கொள்ள வேண்டும்.
- அதில், ஓட்ஸ், அரைத்த பாதாம் பருப்பு பவுடர், கொக்கோ பவுடர், தேன் , தேங்காய் எண்ணெய் மற்றும் சிறிய துண்டுகளாக நறுக்கிய பேரீச்சை பழம் சேர்த்து கொள்ள வேண்டும்.
- இவை அனைத்தும் ஒன்றாக நன்கு அரைத்து கொள்ள வேண்டும். இப்போது பிரவுனி செய்ய வேண்டிய கலவை தயார்.
- பிறகு, பேக் செய்யும் பாத்திரத்தில் அரைத்த கலவையை சேர்த்து நன்கு சமமாக பரப்பி , அதன்மேல் நறுக்கிய டார்க் சாக்லேட் மற்றும் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து தயார் செய்ய வேண்டும்.
- இதை பேக்கிங் பான் சேர்ந்து அடுப்பை குறைந்த சுடரில் வைத்து 30 முதல் 40 நிமிடங்கள் சுட வேண்டும். பேக்கிங் நேரம் சற்று முன் பின் ஆகும். ஆகவே 20நிமிடம் பிறகு பல்குத்தி ( டூத்பிக்) போன்ற பொருட்களை பயன்படுத்தி கேக் சோதனை செய்யவும்.
- கேக் தயார் ஆனதும் அகற்றி , தட்டில் ஆற வைக்க வேண்டும். நன்றாக கேக் ஆறிய பிறகு தேவையான வடிவில் நறுக்கி பரிமாறவும்.
படிப்படியான படங்கள் :
1/2 கப் பாதாம் பருப்பை வறுத்து
மிக்ஸியில் சேர்த்து பவுடர் செய்து ஒரு
கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும்.
மிக்ஸியில் வேக வைத்த பீட்ரூட் சேர்த்து
கட்டிகள் இல்லாமல் மையாக அரைத்து கொள்ளவும்.
இதை பேக்கிங் பான் சேர்ந்து அடுப்பை குறைந்த சுடரில் வைத்து 30 முதல் 40 நிமிடங்கள் சுட வேண்டும். பேக்கிங் நேரம் சற்று முன் பின் ஆகும். ஆகவே 20நிமிடம் பிறகு பல்குத்தி ( டூத்பிக்) போன்ற பொருட்களை பயன்படுத்தி கேக் சோதனை செய்யவும்.
நன்றாக கேக் ஆறிய பிறகு தேவையான
வடிவில் நறுக்கி பரிமாறவும்.
சுவையான பீட்ரூட் பிரவுனி தயார்.
0 Comments