இந்த வெயில் காலம் தொடங்கிய நிலையில் குளிர்ச்சியான பொருட்களை அனைவரும் விரும்புவோம். அந்த வகையில் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய ஒரு காலை உணவு வகை தான் வெந்தயம் இட்லி.
மிகவும் மிருதுவான பஞ்சு போன்ற இந்த இட்லி செய்முறையை என்னுடைய அம்மா விடம் இருந்து தான் கற்றுக் கொண்டேன். உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான இந்த சமையல் குறிப்பை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியாக உள்ளது.
சாதாரண இட்லி விட மிகவும் சுவையாக இருக்கும். வேக வைத்த உணவுகளை அதிகம் சேர்த்து கொள்வது உடலுக்கும் நன்மை தரும். கண்டிப்பாக இதை தயார் செய்து பார்த்து கருத்துக்களை கூறுங்கள்.
தேவையான பொருட்கள் :
1. இட்லி அரிசி - 1 கப்
2. அரிசி - 1 கப்
3. வெந்தயம் - 2 மேஜைக்கரண்டி
4. உளுந்து - 2 மேஜைக்கரண்டி
5. சோடா உப்பு - 1/4 தேக்கரண்டி
1. இட்லி அரிசி - 1 கப்
2. அரிசி - 1 கப்
3. வெந்தயம் - 2 மேஜைக்கரண்டி
4. உளுந்து - 2 மேஜைக்கரண்டி
5. சோடா உப்பு - 1/4 தேக்கரண்டி
செய்முறை விளக்கம் :
- தேவையான அளவு அரிசி மற்றும் இட்லி அரிசியை எடுத்து தண்ணீர் சேர்த்து நன்கு சுத்தம் செய்து எடுக்க வேண்டும்.
- பிறகு, இரண்டு அரிசி மற்றும் 2 மேஜைக்கரண்டி உளுந்து மற்றும் 2 மேஜைக்கரண்டி வெந்தயம் ஒன்றாக சேர்த்து தண்ணீர் சேர்த்து 5-6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- மாவு அரைக்கும் இயந்திரத்தில் ஊற வைத்த இட்லி அரிசி, அரிசி, உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து நன்கு மையாக, அரைத்து எடுக்க வேண்டும்.
- அரைத்த கலவையில் உப்பு சேர்த்து தேவையான இட்லி பதத்தில் கலந்து கொள்ள வேண்டும்.இதை 6-8 மணி நேரம் நன்கு புளிக்க வைக்க வேண்டும்.
- இட்லி ஊற்றுவதற்கு முன்னர் சிறிது ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து சூடாக்க வேண்டும். இட்லி தட்டில் ஈரமான துணியை வைத்து இட்லி மாவை தேவையான அளவு சேர்த்து 7-10 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.
- மிருதுவான பஞ்சு போன்ற வெந்தயம் இட்லி தயார்.
0 Comments