ராகி இட்லி மற்றும் தோசை


  ராகியில் அதிக அளவு புரதம் ,கால்சியம் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளது. கண்டிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடக் கூடிய மற்றும் தேவையான சத்துக்கள் நிறைந்த ஒரு தானியம் தான் ராகி.


குறிப்பாக இந்த கோடைக்காலத்தில் குளிர்ச்சியை தரக்கூடிய உணவு வகைகளில் ராகியும் ஒன்று. அனைத்து விதமாகவும் ராகியை நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். என்னுடைய இணைப்பில் ராகி கேக் மற்றும் ராகி தேங்காய் பர்ஃபி பகிர்ந்துள்ளேன்.


நீங்களும் இந்த மாதிரி அடிக்கடி வித்தியாசமான இட்லி மற்றும் தோசை செய்து சுவைத்து பாருங்கள். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. எப்போதும் அளவான சரிசமமான உணவு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

தேவையான பொருட்கள் :

1. ராகி - 2 கப்
2. இட்லி அரிசி - 1 கப்
3. உளுந்து - 1 கப்
4. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி


செய்முறை விளக்கம் :

  • ‌ராகி மற்றும் இட்லி அரிசியை எடுத்து தனி தனியாக தண்ணீர் சேர்த்து நன்கு சுத்தம் செய்து எடுக்க வேண்டும். 

  • ‌பிறகு, இரண்டு அரிசியும் ஒன்றாக தண்ணீர் சேர்த்து 5-6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். 

  • ‌உளுந்தம் பருப்பு மற்றும் வெந்தயம் எடுத்து தண்ணீர் சேர்த்து ஊற வைக்க வேண்டும். 

  • ‌மாவு அரைக்கும் இயந்திரத்தில் உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து நன்கு மையாக, பஞ்சு போன்று சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து அரைத்து எடுக்க வேண்டும். 

  • ‌ராகி மற்றும் அரிசியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுக்க வேண்டும்.ராகி அரைப்பட  நேரம் அதிகமாக எடுத்து கொள்ளும் 

  • ‌உளுந்து மற்றும் ராகி கலவையில் உப்பு சேர்த்து தேவையான இட்லி பதத்தில் கலந்து கொள்ள வேண்டும். இதை 6-8 மணி நேரம் நன்கு புளிக்க வைக்க வேண்டும். 

  • ‌இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து சூடாக்க வேண்டும். இட்லி தட்டில் ஈரமான துணியை வைத்து இட்லி மாவை தேவையான அளவு சேர்த்து 7-10 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும். மிருதுவான ராகி இட்லி தயார். 

  • ‌தேவையான அளவு மாவை எடுத்து தோசை மாவு பதத்தில் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். தோசை கல்லை சூடாக்கி, தோசை ஊற்றி எடுத்து பரிமாறவும். 

படிப்படியான படங்கள் :

ராகி மற்றும் இட்லி அரிசியை 
ஒன்றாக எடுக்கவும். 


தண்ணீர் சேர்த்து 5-6 மணி நேரம்
 ஊற வைக்கவும். 


உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து 
சுத்தம் செய்து ஊற வைக்கவும். 



அரைபான்  இயந்திரத்தில் உளுந்து 
மற்றும் வெந்தயம் சேர்க்கவும். 


தண்ணீர் தெளித்து நன்கு 
அரைத்து எடுக்க வேண்டும். 


பாத்திரத்தில் மாற்றி 
வைக்க வேண்டும். 


 அரைப்பான் இயந்திரத்தில் ராகி
 மற்றும் அரிசியை சேர்க்கவும். 


தேவையான அளவு தண்ணீர் சேர்த்து
நன்கு அரைத்து எடுக்கவும். 


உளுந்து கலவையில் சேர்க்கவும். 



உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தில் 
நன்கு கலந்து கொள்ள வேண்டும். 


6-8 மணி நேரம் மாவை 
புளிக்க வைக்கவும். 



இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து சூடாக்கி ,தட்டில் ஈர துணியை வைத்து தேவையான அளவு மாவு ஊற்ற வேண்டும்.


7-10 நிமிடம் வேக வைக்க வேண்டும். 


மிருதுவான ராகி இட்லி தயார். 


தேவையான அளவு மாவில்
தண்ணீர் சேர்த்து தோசை மாவு
பதத்தில் கலந்து கொள்ள வேண்டும். 


தோசை மாவு ஊற்றி, 
நல்லெண்ணெய் சேர்க்கவும். 


தோசையை திருப்பி போட்டு
இரண்டு புறமும்வேக வைத்து
 எடுக்க வேண்டும். 


சுவையான மொறு மொறுப்பான
 ராகி தோசை தயார். 

0 Comments