இந்த சாண்ட்விச் ரொம்ப ஆரோக்கியமானது மற்றும் சுவையும் அருமையாக இருக்கும். சாண்ட்விச் உள்ளே வைத்துள்ள சர்க்கரைவள்ளிகிழங்கு சிறிது காரமாகவும் மற்றும் வெளியே உள்ள ரொட்டி முட்டையால் சுட்டு மிருதுவாகவும் இருக்கும்.
ரொட்டியை டோஸ்ட் செய்யும் போது முட்டை கலவையில் பட்டை பொடி இருந்தால் சிறிது சேர்த்து கலந்து செய்யலாம். சுலபமாக உடனே செய்யக் கூடிய ஒரு அருமையான சாண்ட்விச். கண்டிப்பாக நீங்களும் மறக்காமல் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
தேவையான பொருட்கள் :
1. கோதுமை ரொட்டி - 4
2. சர்க்கரைவள்ளிகிழங்கு - 2-3
3. முட்டை - 2
4. வெங்காயம் - 2 மேஜைக்கரண்டி (சிறிய துண்டுகளாக நறுக்கியது)
5. கொத்தமல்லி இலை - சிறிய துண்டுகளாக நறுக்கியது
6. பால் - 1/4 கப்
7. மிளகு தூள் - தேவைக்கேற்ப
8. மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
9. சீரகம் தூள் - 1/4 தேக்கரண்டி
10. உப்பு தேவையான அளவு
11. தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
1. கோதுமை ரொட்டி - 4
2. சர்க்கரைவள்ளிகிழங்கு - 2-3
3. முட்டை - 2
4. வெங்காயம் - 2 மேஜைக்கரண்டி (சிறிய துண்டுகளாக நறுக்கியது)
5. கொத்தமல்லி இலை - சிறிய துண்டுகளாக நறுக்கியது
6. பால் - 1/4 கப்
7. மிளகு தூள் - தேவைக்கேற்ப
8. மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
9. சீரகம் தூள் - 1/4 தேக்கரண்டி
10. உப்பு தேவையான அளவு
11. தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை விளக்கம் :
- சர்க்கரைவள்ளிகிழங்கை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும். பிறகு, ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிழங்கை 10-15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
- ஒரு தட்டில் 2 முட்டையை உடைத்து சேர்த்து கொண்டு, அதில் 1/4 கப் பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
- பிறகு, மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- ஒரு கிண்ணத்தில் வேக வைத்த சர்க்கரைவள்ளிகிழங்கு சேர்த்து நன்கு மசித்து கொள்ள வேண்டும்.
- அதில், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலை, உப்பு, மிளகாய் தூள் மற்றும் சீரகம் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- பிறகு, தோசை கல் அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும். ஒவ்வொரு ரொட்டியாக முழுமையாக முட்டை கலவையில் நினைத்து தோசை கல்லில் சேர்க்க வேண்டும்.
- 1 நிமிடம் சுட்ட பிறகு திருப்பி போட்டு அடுத்த பக்கமும் சுட்டு எடுக்க வேண்டும். இரண்டு புறமும் நன்றாக சுட்ட பிறகு தட்டில் எடுத்து வைக்க வேண்டும்.
- சாண்ட்விச் தயார் செய்ய 2 சுட்ட ரொட்டியை தட்டில் வைத்து, தயார் செய்த சர்க்கரைவள்ளிகிழங்கு கலவையை சேர்த்து நன்கு அழுத்தி விட வேண்டும்.
- அதன்மேல் அடுத்த ரொட்டியை வைத்து சிறிது அழுத்தி விட வேண்டும். இப்போது சுவையான சாண்ட்விச் தயார். தேவையான வடிவில் நறுக்கி பரிமாறவும்.
0 Comments